தபால் நிலையத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர்


தபால் நிலையத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர்
x

மத்திய அரசை கண்டித்து தபால் நிலையத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

புதுக்கோட்டை

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. விதிப்பு, விலைவாசி உயர்வை கண்டித்து புதுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் சுப்புராம் முன்னிலை வகித்தார். போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 120-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story