மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஆம்பூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர்
ஆம்பூர் ெரயில் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பிரபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆம்பூர் நகர தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். ராகுல் காந்தி மீது மத்திய அரசு பொய் வழக்கு போட்டுள்ளதாக மத்திய அரசு மற்றும் அமலாக்கதுறையை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட பொருளாளர் கொத்தூர் மகேஷ், பேரணாம்பட்டு ஒன்றிய தலைவர் சங்கர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story