பிரதிஷ்டை தின விழா
ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் பிரதிஷ்டை தின விழா நடைபெற்றது.
பனைக்குளம்,
ரெகுநாதபுரத்தில் வல்லபை அயயப்பன் கோவில் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை 4.30 மணியளவில் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடைபெற்றது. இதில் மகா கணபதி ஹோமம், காலை 10 மணிக்கு மேல் மகா அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பகல் 12 மணிக்கு கோவில் தலைமை குருசாமி மோகன் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றன. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கோவில்களின் சுவாமிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வல்லபையின் ஆஸ்தான பாடகரும் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது அவர் பணி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு கோவிலில் பாராட்டு விழா தலைமை குருக்கள் ஸ்ரீ மோகன் சுவாமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.