ஆறுமுகநேரியில் 11 அடி விநாயகர் சிலை பிரதிஷ்டை


ஆறுமுகநேரியில் 11 அடி விநாயகர் சிலை பிரதிஷ்டை
x

ஆறுமுகநேரியில் கோவில்அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 11 அடி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா தொடக்கமாக நேற்றுமுன் தினம் இரவு 8 மணி அளவில் ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் இருந்து 11 அடி விநாயகர் சிலை வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மெயின் பஜாரில் உள்ள செந்தில் விநாயகர் கோவில் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டது. வரும் வழியில் பத்திரகாளி அம்மன் கோவிலில் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவர் கசமுத்து, திருச்செந்தூர் வடக்கு ஒன்றிய தலைவர் ஜி. ராமசாமி, தெற்கு ஒன்றிய தலைவர் ஆர். ஜெகன் ஆறுமுகநேரி நகர தலைவர் ஜி. ஜெகன், பொதுச் செயலாளர் அருணாச்சலம், பொருளாளர் சிவலிங்கம், மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று காலையிலும் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மாலையில் நகரில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு 25 அம்மன் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.


Next Story