விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை


விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
x

பட்டுக்கோட்டையில் 51 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த சிலைகள் வருகிற 21-ந்தேதி நசுவினி ஆற்றில் கரைக்கப்படுகிறது.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் 51 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த சிலைகள் வருகிற 21-ந்தேதி நசுவினி ஆற்றில் கரைக்கப்படுகிறது.

51 இடங்களில் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பட்டுக்கோட்டை ராஜபாளையம் தெரு, சந்தையப்பன் மேடை தெரு, குலால் தெரு, ஆதித்தெரு, புது உடையார் தெரு, மேலத் தெரு, தஞ்சை சாலை, தங்கவேல் நகர், மகாராஜசமுத்திரம், தச்சத்தெரு, விவேகானந்த நகர், அண்ணா நகர், பாரதி நகர், கரிக்காடு, முத்துப்பேட்டை ரோடு, இந்திரா நகர், வளவன் புரம், ஆஸ்பத்திரி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் 51 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தெய்வீக தமிழ் புரட்சி பாசறையின் நிறுவனத் தலைவர் ஆதி மதனகோபால் மற்றும் பலர் செய்து வருகின்றனர்.

வருகின்ற 21-ந்தேதி மாலை 4 மணிக்கு பட்டுக்கோட்டை காசாங்குளம் சிவன் கோவிலில் இந்த 51 விநாயகர் சிலைகளும் வந்தடைந்து அன்று மாலை பட்டுக்கோட்டை நகரில் மிக பிரம்மாண்டமான இந்து சமுதாய சமத்துவ வீர வெற்றி விநாயகர் ஊர்வலத்தை நடத்த உள்ளனர். அன்று மாலை 6.30 மணி அளவில் பட்டுக்கோட்டை வெண்டாக்கோட்டை நசுவினி ஆறு தடுப்பணையில் அனைத்து சிலைகளும் கரைக்கப்பட உள்ளது.

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட 13 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். அதன்படி திருச்சிற்றம்பலம் கடைவீதி, பீரங்கி மேடு, அண்ணா நகர், புதுத்தெரு, கோவில் தெரு, பாரதிநகர், செருவாவிடுதி, வடக்கு மற்றும் தெற்கு, நரியங்காடு, புனல்வாசல், ஒட்டங்காடு, களத்தூர், ஆவணம் பெரியநாயகிபுரம் ஆகியவை அடங்கும். மேற்கண்ட இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று மாலை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் செய்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு விழா ஏற்பாட்டாளர்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story