கட்டிட காண்டிராக்டர் கைது
பண மோசடியில் ஈடுபட்ட கட்டிட காண்டிராக்டர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள குமாரபுரத்தை சேர்ந்தவர் ராஜன்பாபு (வயது 45). ஆசிரியரான இவர் தூத்துக்குடி மாவட்டம் சோனகன்விளையை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் இளங்கோவன் (42) என்பவரிடம் வீடு கட்ட ரூ.30¾ லட்சம் பேசி முன்பணமாக ரூ.28½ லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால் இளங்கோவன் ரூ.8 லட்சத்திற்கு மட்டும் வீடு கட்டும் பணியை தொடங்கி, பல மாதங்களாக அப்படியேவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ராஜன்பாபு, இளங்கோவனிடம் கேட்டபோது அவர் வீடு கட்டி தரமறுத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து திசையன்விளை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து இளங்கோவனை கைது செய்தார்.
Related Tags :
Next Story