கட்டிட காண்டிராக்டர் விஷம் குடித்து தற்கொலை
கருங்கல் அருகே கட்டிட காண்டிராக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி
கருங்கல்:
கருங்கல் அருகே கட்டிட காண்டிராக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கருங்கல் அருகே உள்ள உதயமார்த்தாண்டம் மாவிளை வாய்க்கால்கரை பகுதியை சேர்ந்தவர் வினோ (வயது 42), கட்டிட காண்டிராக்டர். இவருடைய மனைவி ஜான்சிராணி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வினோவுக்கு கடன் பிரச்சினை இருந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகள மனமுடைந்து காணப்பட்டு வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று தேவிகோடு குளக்கரை பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று விேனா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மனைவி ஜான்சிராணி கருங்கல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story