ரெயில் மோதி கட்டிட காண்டிராக்டர் பலி


ரெயில் மோதி கட்டிட காண்டிராக்டர் பலி
x

தண்டவாளத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டபோது, ரெயில் மோதி காண்டிராக்டர் பலியான சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

தண்டவாளத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டபோது, ரெயில் மோதி காண்டிராக்டர் பலியான சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

கட்டிட காண்டிராக்டர்

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ரெயில்வே நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் நேற்று ஒரு ஆண்பிணம் கை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார்ராஜ், ஜோசப் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தவர் நெல்லை மாவட்டம் மேல கருங்குளம் பகுதியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டரான ஆறுமுகம் (வயது 37) என்பது தெரியவந்தது. மேலும், அவர் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு மேலப்பாளையம் ரெயில் நிலையத்துக்கு வந்துள்ளார்.

ரெயில் மோதி பலி

பின்னர், ரெயில் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அங்குள்ள தண்டவாளத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது மோதிச் சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையே ஆறுமுகத்தின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான ஆறுமுகத்திற்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

தண்டவாளத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டபோது, ரெயில் மோதி காண்டிராக்டர் பலியான சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story