பாம்பு கடித்து கட்டிட மேஸ்திரி சாவு
கண்ணமங்கலம் அருகே பாம்பு கடித்து கட்டிட மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.
திருவண்ணாமலை
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் பொன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 40), கட்டிட மேஸ்திரி. இவர் புதுப்பேட்டை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இவருக்கு லட்சுமி (28) என்ற மனைவியும், பிரியதர்ஷினி (6), மேகவர்ஷினி (2) ஆகிய மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி மாலை தனது வீட்டிருகே இருந்த போது மோகன்ராஜை விஷப்பாம்பு கடித்துள்ளது.
உடனடியாக அவர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி லட்சுமி கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தரணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story