முதுமலை புலிகள் காப்பகத்தில் 100 கிலோ மீட்டர் தூரம் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி
முதுமலை புலிகள் காப்பகத்தில் 100 கிலோ மீட்டர் தூரம் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கூடலூர்
முதுமலை புலிகள் காப்பகத்தில் 100 கிலோ மீட்டர் தூரம் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
எளிதில் தீ பரவும் அபாயம்
நீலகிரி மாவட்டத்தில் 60 சதவீத காடுகள் உள்ளன. முக்கியமாக முதுமலை புலிகள் காப்பகம், கூடலூர் வனப் பகுதி, ஊட்டி வனப் பகுதி என ஆயிரக்கணகான சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அடர்ந்த காடுகள் உள்ளன. இந்த ஆண்டு நீலகிரியில் 8 மாதங்கள் மழை பெய்தது. இதனால் திரும்பிய பக்கம் எல்லாம் பசுமையாக காட்சி அளித்தது. ஆனால் கடந்த மாதம் ஏற்பட்ட பனி பொழிவால் புல் வெளிகள், காடுகள் கருக தொடங்கியுள்ளது.
இதனால் வனப்பகுதி வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. முதுமலை புலிகள் காப்பகம் வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றது. இதில் வரும் சுற்றுலா பயணிகள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை சாலையோரங்களில் வீசி விடுகின்றனர். இதனால் வனப்பகுதியில் எளிதில் தீ பரவுகிறது. வன விலங்குகள் மற்றும் விலை உயர்ந்த மரங்கள் அழிந்து விடும் அபாயம் உள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் 100 கிலோ மீட்டர் தூரம் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அதற்கு ஏற்ப கூடலூர், சிங்காரா வனப்குதியில் காட்டுத்தீ பரவியது. இதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறையினர் சாலையோரங்களின் இருபுறமும் 6 மீட்டர் அகலத்திற்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் தற்போது மும்முரமக ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து புலிகள் காப்பகத்துக்குட்பட்ட சிங்காரா, மசினகுடி, தெப்பக்காடு, சீகூர் உள்ளிட்ட வன சரகங்களின் ரேஞ்சர்கள் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு சரகத்திற்கும் 100 கி.மீ தூரம் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்படுவதாகவும், இப்பணி சில வாரங்களில் நிறைவு பெறும் என வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் கூறும் போது, நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை வனப்பகுதியில் வீசக்கூடாது. தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் எச்சரித்தனர்.