ரூ.4 கோடியில் 30 டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் பணி


ரூ.4 கோடியில் 30 டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் பணி
x

கே.வி.குப்பத்தில் ரூ.4 கோடியில் 30 டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் பணி தொடங்கியது.

வேலூர்

கே.வி.குப்பம் தாலுகாவில் மறுசீரமைப்பு மின் வினியோக திட்டத்தின் கீழ் வடுகந்தாங்கல் துணை மின் நிலையத்திலிருந்து விவசாய இணைப்புகளுக்கான மின்மாற்றி நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் கே.வி.குப்பம், வேப்பங்கநேரி, பெருமாங்குப்பம், முருக்கம்பட்டு, மகமதுபுரம், மாச்சனூர், காங்குப்பம், தேவரிஷிகுப்பம், நாகல் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3,900 விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் கிடைக்கும். இதற்கான தொடக்கவிழா மேல்மாயில் சாலையில் நடைபெற்றது. காட்பாடி செயற்பொறியாளர் பரிமளா தலைமை தாங்கினார்.

வடுகந்தாங்கல் உபகோட்ட செயற்பொறியாளர் சுபாஷினி, உதவிப் பொறியாளர்கள், ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தில் ரூ.4 கோடியே 6 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பில் புதிதாக 30 டிரான்ஸ்பார்மர்கள், 342 உயர் அழுத்த மின் கம்பங்கள், 16 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய உயர் அழுத்த மின்பாதை அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முடிவில் கே.வி.குப்பம் உதவி பொறியாளர் ஏ.அருள் சரவணன் நன்றி கூறினார்.


Next Story