ரூ,120 கோடியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி
தண்டராம்பட்டு வழியாக அரூர் வரை ரூ,120 கோடியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணியை அதிகாரி நேரில் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை
தண்டராம்பட்டு
முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு நிதி திட்டம் மூலம் திருவண்ணாமலை அருகே செட்டிபட்டு ஊராட்சியில் இருந்து தண்டராம்பட்டு வழியாக அரூர் வரை ரூ.120 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை இன்று திருவண்ணாமலை நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் ஆய்வு செய்தார்.
அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஆய்வின்போது கோட்ட பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர்கள் தியாகு, இன்பநாதன் ,உதவி பொறியாளர்கள் சசிகுமார், பிரீத்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story