65 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட நடவடிக்கை
கொரடாச்சேரி ஒன்றியத்தில் 65 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என ஒன்றியக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரடாச்சேரி:
கொரடாச்சேரி ஒன்றியத்தில் 65 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என ஒன்றியக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒன்றியக்குழு கூட்டம்
கொரடாச்சேரி ஒன்றியக்குழு கூட்டம் துணைத் தலைவர் பாலச்சந்திரன் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன், முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் பிரவின்குமார் தீர்மானங்களை படித்தார்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதன் விவரம் வருமாறு:-
நாகூரான்(அ.தி.மு.க.): பருவ மழையை சமாளிக்க சிறப்பாக வடிகால் தூர்வாரப்பட்டது. வளவநல்லூர் பள்ளி சாலையை சீரமைக்க வேண்டும். அபிவிருத்தீஸ்வரம், ஆர்ப்பாவூர் சாலையை சீரமைக்க வேண்டும். சித்தர் கோவிலுக்கு செல்லும் திருக்களம்பூர், அடவங்குடி இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும்.
வடிகால் வசதி
ஏசுராஜ்(அ.தி.மு.க.): வண்டாம்பாளையம் சிவசக்தி நகரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். இப்பகுதியில் பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
ஆனந்த் (தி.மு.க.) : அரசமங்கலம் சாலையை சீரமைக்க வேண்டும்.
கவிதா (இந்திய கம்யூனிஸ்டு) : அத்திசோழமங்கலத்தில் தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். பெருமாளகரம் மேலத்தெருவில் வடிகால் வசதி செய்து தர வேண்டும். கொடிமங்கலம் பள்ளி சுவற்றின் வழியாக மின் கம்பி புகுந்து செல்கிறது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆகாயத்தாமரை
மீரா(அ.தி.மு.க.) : மேலராதாநல்லூர், காவாலக்குடி சாலையை சீரமைக்க வேண்டும்.
உமாமகேஸ்வரி (தி.மு.க.) : கமலாபுரம் தார்சாலையை சீரமைக்க வேண்டும். தாழைக்குடி காட்டாற்று பாலம் சாலையை சீரமைக்க வேண்டும்.
சத்தியேந்திரன்(தி.மு.க.) : எண்கண் வெட்டாறு ரெகுலேட்டர் அருகே தேங்கி உள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற வேண்டும்.
65 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து துணைத் தலைவர் பாலச்சந்திரன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு தகுந்தாற் போல் சாலைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். கொரடாச்சேரி வட்டாரத்தில் மக்கள் நலன் கருதி 65 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டு தற்போது ரூ.3 கோடி மதிப்பில் 25 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். இவ்வாறு துணைத் தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர் ரவீந்திரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம் நன்றி கூறினார்.