ரூ.8½ கோடியில் 7 தரைப்பாலங்கள் அமைக்கும் பணி


ரூ.8½ கோடியில் 7 தரைப்பாலங்கள் அமைக்கும் பணி
x

ஜோலார்பேட்டை பகுதியில் ரூ.8½ கோடியில் 7 தரைப்பாலங்கள் அமைக்கும் பணியை தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையில் இருந்து புத்துக்கோவில் வரை செல்லும் சாலை, பெரிய கம்மியம் பட்டு, காவேரிபட்டு, சின்னக்கம்மியம் பட்டு, பெரிய மோட்டூர், கூத்தாண்ட குப்பம், கேத்தாண்டப்பட்டி, புத்துக்கோவில் ஆகிய ஊராட்சிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக இருந்து வருகிறது. மேலும் இந்த சாலையில் பாலாறு குறுக்கிடுகிறது.

இதனால் மழைக்காலங்களில் இந்த சாலையை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடந்து செல்ல முடயாமல் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் அவல நிலை இருந்து வருகிறது.

இதனால் ஜோலார்பேட்டையில் இருந்து புத்துக்கோவில் வரை உள்ள 6 கிலோமீட்டர் சாலையில் தண்ணீர் செல்லும் பகுதிகளில் பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கடந்த 40 ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் ஜோலார்பேட்டை தொகுதி க.தேவராஜி எெம்.எல்.ஏ. நடவடிக்கை மேற்கொண்டு, 6 கிலோமீட்டர் சாலையில் பாலாற்றின் குறுக்கே 2 பெரிய பாலங்கள் மற்றும் 5 சிறிய பாலங்கள் கட்டுவதற்காக ரூ.8 கோடியே 49 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி முன்னிலை வகித்தார். இதில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பாலம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் மணி சுந்தரம், சாலை ஆய்வாளர் வெங்கடேசன், உள்ளாட்சி பிரதிநிதிகள், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள், சாலை பணியாளர்கள கலந்து கொண்டனர்.


Next Story