ஏ.வி.எம். கால்வாயின் குறுக்கே ரூ.31 லட்சத்தில் புதிய பாலம் கட்டும் பணி ;ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
ஏ.வி.எம். கால்வாயின் குறுக்கே ரூ.31 லட்சத்தில் புதிய பாலம் கட்டும் பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
கருங்கல்,
ஏ.வி.எம். கால்வாயின் குறுக்கே ரூ.31 லட்சத்தில் புதிய பாலம் கட்டும் பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
புதிய பாலம் கட்டும் பணி
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்தூர் ஊராட்சியில் உள்ள இரவிபுத்தன்துறை பிரேயர் சென்டர் செல்லும் சாலையையும், கே.ஆர்.புரம்-பூந்தோப்பு காலனி செல்லும் சாலையையும் இணைக்கும் விதமாக ஏ.வி.எம். கால்வாயின் குறுக்கே புதிய பாலம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து புதிய பாலம் அமைக்க ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இந்தநிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சத்து 9 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் கிறிஸ்டோபர், தூத்தூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் சூசை பிரடி, தூத்தூர் ஊராட்சி துணை தலைவர் சாரா, இரவிபுத்தன்துறை கிளை காங்கிரஸ் தலைவர் ஜஸ்டின், இரவி புத்தன்துறை ஆலய அருட்பணியாளர் ரெஜீஷ் பாபு, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் டைட்டஸ், வார்டு உறுப்பினர்கள் ததேயூஸ் மேரி, சாந்தி மற்றும் கொச்சுராணி, யேசுதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.