ரூ.77½ லட்சத்தில் புதிய கால்நடை ஆஸ்பத்திரி கட்டும் பணி
திருத்துறைப்பூண்டியில் ரூ.77½ லட்சத்தில் புதிய கால்நடை ஆஸ்பத்திரி கட்டும் பணி
திருவாரூர்
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் ரூ.77.50 லட்சத்தில் புதிய கால்நடை ஆஸ்பத்திரி கட்டும் பணி தொடக்க விழா நடந்தது. இந்த விழாவில் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் ராமலிங்கம் வரவேற்றார். மாரிமுத்து எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் ஆகியோர் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தனர்.இதில் பொதுப்பணித்துறை கட்டிட கட்டுமான பிரிவு பொறியாளர் சிங்காரம், உதவி பொறியாளர் சிவக்குமார், தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சிக்கந்தர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சுந்தர் மற்றும் கால்நடை ஆஸ்பத்திரி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story