ராஜன் வாய்க்காலில் பாலம் கட்டும் பணி
ராஜன் வாய்க்காலில் பாலம் கட்டும் பணி
திருத்துறைப்பூண்டி அருகே ராஜன் வாய்க்காலில் பாலம் கட்டும் பணியை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு செய்தார்.
வாய்க்காலில் பாலம்
திருத்துறைப்பூண்டி அருகே குரும்பல் ஊராட்சி கச்சலாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் குரும்பல் கிராமம், பொன்னிரை அரசு பள்ளி, தகரவெளி புற்றடி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லவேண்டும் என்றால் அருகே உள்ள ராஜன் வாய்க்காலில் இறங்கி தான் போகவேண்டும். இங்கு யாராவது இறந்தால் அவரது உடலை வாய்க்காலில் இறங்கி தான் மயானத்திற்கு அடக்கம் செய்ய செல்ல வேண்டும். இந்த வாய்க்காலில் பாலம் கட்டவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆய்வு
இதனை நிறைவேற்ற ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர் உத்தரவிட்டார். இதையடுத்து ராஜன் வாய்க்காலில் ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர், துணை தலைவர் வக்கீல் ராமகிருஷ்ணன், பொறியாளர் சூரியமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.