தூத்துக்குடியில்திருச்செந்தூர்ரவுண்டானாமேம்பாலத்தில் காங்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி தீவிரம்


தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில்திருச்செந்தூர்ரவுண்டானாமேம்பாலத்தில் காங்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் திருச்செந்தூர் ரவுண்டானா மேம்பாலத்தில் காங்கிரீட் தூண்கள் பொருத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதை தொடர்ந்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

மேம்பாலம்

தூத்துக்குடியில் திருச்செந்தூர் ரோடு ரவுண்டானாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பாலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் சாலை பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. பாலத்தின் மத்தியில் தூண்களை இணைக்கும் வகையில் 32 ராட்சத காங்கிரீட் தூண்கள் அதற்கான இடத்தில் பொருத்தப்படுகிறது.

இந்த பணிகள் நேற்று மதியம் 12 மணி அளவில் தொடங்கியது. இதற்காக ராட்சத கிரேன்கள் மூலம் அந்த பகுதியில் தயார் செய்து வைக்கப்பட்டு இருந்த தூண்கள் உரிய இடத்தில் பொருத்தப்பட்டன.

ஆய்வு

இந்த பணிகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய திட்ட இயக்குனர் ஒய்.ஏ.ராவுட், கள என்ஜினீயர் கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திட்டமிட்டபடி பணிகளை 10 நாட்களுக்குள் முடிப்பதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதனால் நேற்று இரவு வரை பணி நீடித்தது. மேம்பால பணிகள் நடைபெறுவதால் வாகன போக்குவரத்து மாற்றி விடப்பட்டு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் சுற்றி சென்றனர். வருகிற 11-ந் தேதி வரை காங்கிரீட் தூண்கள் பொருத்தும் பணி தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது.


Next Story