ரூ.10½ லட்சத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி
ரூ.10½ லட்சத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர்
ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க 15-வது நிதிக்குழு மானியத்தில் மதன் நகர், அம்பேத்கர் நகர் பகுதியில் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சுவிதா கணேஷ் தலைமை தாங்கி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் விஜய், ஊராட்சி உறுப்பினர்கள் தம்பிதுரை, பவானி, விஜய் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story