அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ரூ.61 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டும் பணி


அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ரூ.61 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டும் பணி
x

அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ரூ.61 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டும் பணி

விழுப்புரம்

திண்டிவனம்:

மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசை மற்றும் மாசிப் பெருவிழா ஆகிய விழாக்களின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இவர்களுக்கு போதுமான சுகாதார வளாகம் இல்லை. எனவே இங்கு சுகாதார வளாகம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. அதன்பேரில் ரூ.61 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதே நேரத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கோவில் வளாகத்தில் ஊரணி பூமி பூஜையையும், கட்டுமான பணியையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மோகன், இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், தாசில்தார் கோவர்த்தனன், ஒன்றியக்குழு தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், துணை தலைவர் விஜயலட்சுமி முருகன், வட்டார கல்விக்குழு தலைவர் நெடுஞ்செழியன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுப்பிரமணியன், செல்வி ராமசரவணன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், அறங்காவலர் குழு தலைவர் வடிவேல் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story