நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி


நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி
x

பேரணாம்பட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியை அமலு விஜயன் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

வேலூர்

பேரணாம்பட்டு நகராட்சிக்குட்பட்ட ஆயக்கார வீதியில் அமைந்துள்ள சுடுகாட்டிற்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க ரூ 1 கோடியே 46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையுடன் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி ஆயக்கார வீதியில் அமைந்துள்ள சுடுகாட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரணாம்பட்டு நகராட்சி தலைவர் பிரேமா வெற்றிவேல் தலைமை தாங்கினார். நகர தி.மு.க. செயலாளரும் நகராட்சி துணை தலைவருமான ஆலியார் ஜூபேர் அஹம்மத் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக அமலு விஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நவீன எரிவாயு தகன மேடைக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் 11-வது வார்டு ரஹமதாபாத் பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.9 லட்சம் செலவில் கழிவு நீர் கால்வாய் மற்றும் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை அமலுவிஜயன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில் பேரணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் சுபாஷினி, நகராட்சி கவுன்சிலர்கள் அப்துல் ஜமீல், அஹம்மத் பாஷா கோவிந்தராஜ், நகர தி.மு.க. துணை செயலாளர் மீராஞ்சி சலீம், பொருளாளர் ஆலியார் அர்ஷத், மாவட்ட பிரதிநிதிகள் வில்லியம் பீட்டர், வெற்றிவேல், வார்டு செயலாளர்கள் தாஸ், வெங்கடேசன், நாட்டாண்மைதாரர் மணவாளன் உள்பட பொதுமக்கள் பங்கேற்றனர்.


Next Story