ரூ.20 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டும் பணி


ரூ.20 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டும் பணி
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை நகராட்சியில் ரூ.20 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டும் பணி முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. பங்கேற்றார்

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை நகராட்சிக்குட்பட்ட டாடா நகர் மற்றும் சேவா பாரதி பகுதிகளில் தலா ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டுவதற்கு நாகை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகளை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ., தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். இதில் நாகை நகரசபை தலைவர் மாரிமுத்து, நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, கவுன்சிலர்கள் ஞானமணி, கமலநாதன், நகராட்சி பொறியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story