ரூ.44 லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணி


ரூ.44 லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணி
x

ரூ.44 லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டியப்பனூர் மெயின் ரோட்டில் இருந்து லாலாபேட்டை வரை இரண்டு கிலோ மீட்டர் தூரம் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை லாலாபேட்டை கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சி.செல்வம் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் எம்.கோபால் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு, கிராம வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினர் மீனாட்சி ராமலிங்கம், லாலா பேட்டையை சேர்ந்த அசோகன், அபரஞ்சி, கருணாகரன் ஆண்டியப்பனூர் குமார் மற்றும் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


Next Story