அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணிஅமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு

அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணிஅமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு
x

அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணிஅமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

ஆரணி

அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணிஅமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார்.

ஆரணி மில்லர்ஸ் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கமிட்டி வளாகத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 111 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர், அவர்களுக்காக தமிழக அரசு ஆரணியை அடுத்த தச்சூர் சமத்துவபுரம் அருகாமையில் 111 வீடுகள் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது அந்த பணிகளை இலங்கை மறுவாழ்வுத்துறை அமைச்சரும், சிறுபான்மை துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அங்கு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடமும், பணியாளர்களிடமும் இந்த வீடுகள் தாங்கள் வாழும் வீடுகள் என நினைத்து நல்ல முறையில் சிறப்பாக விரைந்து முடித்துக் கொடுங்கள் என கூறினாா். ஆய்வின்போது கோட்டாட்சியர் எம். தனலட்சுமி, தாசில்தார் ஆர்.ஜெகதீசன், மண்டல துணை தாசில்தார்கள் ரவிச்சந்திரன், திருவேங்கடம், வருவாய் ஆய்வாளர் வேலுமணி, ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story