ரூ.3½ கோடிக்கு புதிய சாலை அமைக்கும் பணி


ரூ.3½ கோடிக்கு புதிய சாலை அமைக்கும் பணி
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:17:12+05:30)

நாங்கூர்-கீழையூர் இடையே ரூ.3½ கோடிக்கு புதிய சாலை அமைக்கும் பணி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை

திருவெண்காடு:

சீர்காழி ஒன்றியம், செம்பதனிருப்பு-கீழையூர் இணைப்பு சாலை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். இந்த சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து நாங்கூர்-கீழையூர் இணைப்பு சாலை 4½ கிலோமீட்டர் தொலைவிற்கு புதிதாக அமைத்திட பாரத பிரதமர் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சாலை அமைக்கும் பணி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முத்துக்குமரன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் இளங்கோவன், காத்திருப்பு ஊராட்சி மன்ற தலைவர் அன்புமணி மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய உதவி பொறியாளர் தெய்வானை வரவேற்றார். பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்து பேசினார். இதில் ஒன்றிய பொறியாளர் கலையரசன், தி.மு.க. பிரமுகர்கள் மனோகரன், வெங்கட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சித் துணைத் தலைவர் அனிதா பார்த்திபன் நன்றி கூறினார்.


Next Story