ரூ.10 லட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணி


ரூ.10 லட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணி
x

நாங்குநேரியில் ரூ.10 லட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் மறுகால்குறிச்சி பஞ்சாயத்து நாங்குநேரி தாலுகா அலுவலகம் அருகில், நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு செல்வதற்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது. நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் எஸ்.ஆரோக்கிய எட்வின், ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் முத்துலட்சுமி, மறுகால்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் சாந்தகுமாரி, துணைத்தலைவர் புஷ்பபாண்டி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story