ரூ.20 லட்சத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டும் பணி


ரூ.20 லட்சத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டும் பணி
x

ரூ.20 லட்சத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டும் பணியை வில்வநாதன் எம்.எல்.ஏ: தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

ஆம்பூரை அடுத்த அரங்கல்துருகம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பள்ளி சமையல் கூடம் கட்டுவதற்கான பணியையும், கதவாளம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கொண்ட புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது.

ஆம்பூர் தொகுதி வில்வநாதன் எம்.எல்.ஏ., மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கதவாளம் ஊராட்சி மன்ற தலைவர் சக்திகணேஷ், அரங்கல்துருகம் ஊராட்சி மன்ற தலைவர் பானுமதி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கார்த்திக்ஜவகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story