சிவகிரி அருகே நெற்களம் அமைக்கும் பணி
சிவகிரி அருகே நெற்களம் அமைக்கும் பணி பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.
தென்காசி
சிவகிரி:
சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரி பஞ்சாயத்து பகுதியில் விவசாயிகளின் நலனுக்காக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் நெற்களம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. வாசுதேவநல்லூர் யூனியன் தலைவரும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன். முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். சிவகிரி நகர பஞ்சாயத்து தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, வாசுதேவநல்லூர் யூனியன் உதவி ஆணையாளர் வள்ளிமயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஸ்வநாதப்பேரி பஞ்சாயத்து தலைவர் ஜோதி மணிகண்டன், செயலர் உமாமகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story