ரூ.25 லட்சத்தில் மயான சுற்றுச்சுவர் கட்டும் பணி


ரூ.25 லட்சத்தில் மயான சுற்றுச்சுவர் கட்டும் பணி
x

காரிமங்கலம் பேரூராட்சியில் ரூ.25 லட்சத்தில் மயான சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் பேரூராட்சி 12-வது வார்டு பாக்கியலட்சுமி தியேட்டர் பின்புறம் உள்ள மயானத்தில் சுற்றுச்சுவர் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் காவேரி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தில்குமார், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து சுற்றுசுவர் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் கணபதி, கூட்டுறவு சங்க தலைவர் சந்திரன், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் சிவம், வக்கீல் பாரதி, பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story