ரூ.24½ லட்சம் செலவில் ரேஷன் கடை கட்டும் பணி
திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் ரூ.24½ லட்சம் செலவில் ரேஷன் கடை கட்டும் பணியை நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
திருப்பத்தூர் நகராட்சி 17-வது வார்டு லட்சுமணார் தெரு பகுதியில் நல்லதம்பி எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சத்து 30 ஆயிரத்தில் புதிய ரேஷன் கடை கட்ட பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா தலைமை தாங்கினார். கவுன்சிலர் பிரேம்குமார், வரவேற்றார்,
புதிய ரேஷன் கடைக்கு பூமி பூஜை போட்டு பணிகளை திருப்பத்தூர் தொகுதி ஏ.நல்லதம்பி எம்எல்ஏ, நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் ஆகியோர் தொடங்கி வைத்து பேசினார்கள். முடிவில் பி.வாசு நன்றி கூறினார்.
இதேபோல் 25-வது வார்டு பீர்பால் நுண்ணுயான் தெரு பகுதியில் ரூ.12 லட்சத்துக்கு 30 ஆயிரம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டும் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
நகராட்சி துணைத்தலைவர் சபியுல்லா தலைமை தாங்கினார். கவுன்சிலர் பர்வீன் பேகம் வரவேற்றார். புதிய ரேஷன் கடை கட்டும் பணியை நல்லதம்பி எம்.எல்.ஏ. நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தொடங்கி வைத்து பேசினார்கள்.
நிகழ்ச்சியில் முன்னாள் நகராட்சி தலைவர் அரசு, நகராட்சி கவுன்சிலர்கள் மு.வெற்றி கொண்டான், எஸ்.கோபிநாத், சுதாகர், ரமேஷ், ஜீவிதா பார்த்திபன் உள்பட பல பேசினார்கள்.
இதில் டி.சந்திரசேகர், நகராட்சி உதவி பொறியாளர் ஜெயக்குமார், பணி மேற்பார்வையாளர் கார்த்தி, ஒப்பந்ததாரர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.