நாகூர் தர்கா குளத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி


நாகூர் தர்கா குளத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி
x

நாகூர் தர்கா குளத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி

நாகப்பட்டினம்

நாகூரில் உள்ள தர்காவுக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த தர்கா குளத்தில் உள்ள தடுப்பு சுவர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. இதனை சீரமைப்பதற்காக தமிழக அரசு ரூ.4.37 கோடி ஒதுக்கியது. இதையடுத்து நாகூர் தர்கா குளத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நாகூர் தர்கா நிர்வாகத்தினர் நாகூர் குளத்தில் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நேற்று கலெக்டர் அருண்தம்புராஜ், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் நாகூர் தர்கா குளத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது நாகூர் தர்கா 466-வது கந்தூரி விழா அடுத்தமாதம்(டிசம்பர்) 24-ந்தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்படும் என உறுதி அளித்தார். இதில் நாகூர் தர்கா நிர்வாகிகள், நகர் மன்ற துணைத்தலைவர், நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story