ரூ 20 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி


ரூ 20 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி
x
தினத்தந்தி 22 Sept 2022 12:15 AM IST (Updated: 22 Sept 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி ஒன்றியத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி அமைச்சர் செஞ்சிமஸ்தான் தொடங்கி வைத்தார்

விழுப்புரம்

செஞ்சி

செஞ்சி ஒன்றியத்துக்குட்பட்ட மீனம்பூர், பள்ளியம்பட்டு கிராமங்களுக்கு செல்லும் மண் சாலையை ஒன்றிய பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் தார் சாலையாக தரம் உயர்த்தி அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இதில் செஞ்சி தாசில்தார் நெகருன்னிசா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு, வெங்கடசுப்பிரமணியன், மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, வக்கீல் அணி மணிவண்ணன், ஊராட்சி மன்ற தலைவி கண்ணகி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்க தலைவர் அணையேரி ரவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், செல்வகுமார், நிர்வாகிகள் வாசு, அய்யாதுரை, பழனி, இர்பான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story