மல்லப்பள்ளி ஊராட்சியில் ரூ.32 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
மல்லப்பள்ளி ஊராட்சியில் ரூ.32 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம்.
ஜோலார்பேட்டை ஒன்றியம் மல்லப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட முத்தனபள்ளி பனந்தோப்பு பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமாரிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய பொதுநிதி திட்டத்தின் கீழ் ரூ.32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் எஸ். சத்தியா சதீஷ்குமார் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தார். ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.கே.சதீஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் புரட்சிசந்திரன், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், சாந்தன், சத்யநாராயணன், ஒப்பந்ததாரர் மகாவேல், ஊராட்சி செயலாளர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.