சமையல் அறைக்கு கட்டிடம் கட்டும் பணி தீவிரம்
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக ஜாம்புவானோடை வடகாடு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி சமையல் அறைக்கு கட்டிடம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தகர கொட்டகையில் சமையல் அறை
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகா ஜாம்புவானோடை வடகாடு பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சமையல் அறை கட்டிடம் இல்லாததால் தகர கொட்டகையில் செயல்பட்டு வந்தது. இதனால் மழை, வெயில் காலங்களில் சமையல் செய்ய முடியாமல் சமையல் செய்பவர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் சமையல் அறைக்கு புதிய கட்டிடம் கட்டித்தர ேவண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
கட்டிடம் கட்டும் பணி தீவிரம்
இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் பிரசுரமானது. இதன் எதிரொலியாக முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவக்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் கட்டிடம் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டது. அதனை தொடர்ந்து சமையல் அறைக்கு புதிதாக கட்டிடம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.