கோத்தகிரியில் போக்குவரத்து பணிமனை கட்டும் பணி மும்முரம்


கோத்தகிரியில்  போக்குவரத்து பணிமனை கட்டும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் ரூ.2½ கோடி செலவில் போக்குவரத்து கழகத்திற்கு புதிய பணிமனை கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் ரூ.2½ கோடி செலவில் போக்குவரத்து கழகத்திற்கு புதிய பணிமனை கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

புதிய பணிமனை

கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் தனியார் கட்டிடத்தில், அரசு போக்குவரத்து கழக பணிமனை மற்றும் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த பணிமனையில் இருந்து பல்வேறு கிராமங்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு என 63 வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பணிமனையில் பஸ்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. இதனால் காமராஜர் சதுக்கம் உள்ளிட்ட சாலையோரங்கள், பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது.

டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் தங்கி ஓய்வெடுக்க கூட வசதியில்லாத நிலை காணப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு கோத்தகிரி அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமாக பணிமனை கட்ட அதிகாரிகள் முடிவு செய்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய போக்குவரத்து பணிமனை கட்டுவதற்காக ரூ.2½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

விரைந்து முடிக்க நடவடிக்கை

இதையடுத்து வருவாய்த்துறை மூலம் ஓரசோலை அருகே நிலஅளவை மேற்கொள்ளப்பட்டு, பொக்லைன் எந்திரம் மூலம் சமன் செய்யப்பட்டது. 100 மீட்டர் நீளத்திற்கு சாலையோர தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் நிறைவடைந்தது. தற்போது அங்கு கட்டிடம் கட்டுவதற்காக பொக்லைன் எந்திரம் நிலத்தை சமப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது,

புதிய பணிமனை கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இங்கு பஸ்கள் பராமரிப்பு பணிமனை, பணியாளர்களுக்கு தங்கும் ஓய்வறை, உணவகம், கழிப்பிடம், டீசல் பங்க், பஸ்களை கழுவும் மேடை, காவலாளி அறை மற்றும் அலுவலகம் கட்டப்பட உள்ளது. இந்த பணிமனைக்குள் 25 பஸ்களை பாதுகாப்பாக நிறுத்த முடியும். கட்டுமான பணிகள் இன்னும் சில மாதங்களுக்குள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றனர்.



Next Story