கோவில்பட்டி அருகே ரூ.9.48 லட்சத்தில் வாறுகால் அமைக்கும் பணி


கோவில்பட்டி அருகே ரூ.9.48 லட்சத்தில் வாறுகால் அமைக்கும் பணி
x

கோவில்பட்டி அருகே ரூ.9.48 லட்சத்தில் வாறுகால் அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியை அடுத்துள்ள பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து அன்னை தெரேசா நகரில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.9.48 லட்சம் செலவில் வாறுகால் அமைக்கும் பணி தொடக்க விழா நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத்தலைவர் பழனிச்சாமி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story