கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
தூத்துக்குடி அருகேகட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி கே.டி.சி நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 41). கட்டிட தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து உள்ளது. இதனால் வீட்டில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் முதல் மனைவி விவாகரத்து செய்து விட்டாராம். இதைத் தொடர்ந்து 2-வது திருமணம் செய்த நிலையில், அவரும் பிரிந்து சென்று விட்டாராம். இதில் மனம் உடைந்து காணப்பட்ட பாலசுப்பிரமணியன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story