கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை


கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 Jun 2023 12:15 AM IST (Updated: 28 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை அருகே மது குடிக்கும் பழக்கத்தால் மனைவியை பிரிந்து சென்று வாழ்ந்த நிலையில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை அருகே மது குடிக்கும் பழக்கத்தால் மனைவியை பிரிந்து சென்று வாழ்ந்த நிலையில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கட்டிட தொழிலாளி

கழுகுமலை அருகே உள்ள கரடிகுளம் சின்னகாலனி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(வயது 45). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி (40). இவர்களுக்கு சூர்யபிரகாஷ் (21), மணிபாரதி (18) என்ற 2 மகன்கள் உள்ளனர். ஆனந்தராஜூவுக்கு மதுகுடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனை அவருடைய மனைவி செல்வி கண்டித்துள்ளார்.

மனைவியை விட்டு பிரிந்தார்

இதனால் மனமுடைந்த ஆனந்தராஜ் கோபித்துக்கொண்டு கடந்த வாரம் சி.ஆர்.காலனியில் உள்ள தனது தாயார் பன்னீர்செல்வம் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் வீட்டில் திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாலை 4 மணியளவில் வீட்டிற்கு வந்த அவரது தாயார் மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சம்பவ வீட்டிற்கு ெசன்று ஆனந்தராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story