கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர்
இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் அரியலூர் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாத ஓய்வூதியம் ஆயிரம் ரூபாய் என்பதை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியதை விரைந்து அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியத்தை 3 ஆயிரம் ரூபாய் அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 60 வயது நிறைவடைந்த நாள் முதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலதாமதம் ஆனால் நிலுவைத் தொகையுடன் ஓய்வூதியத்தை கணக்கிட்டு வழங்க வேண்டும்.
விபத்து எங்கு நடந்து இறந்தாலும் ரூ.5 லட்சம் நிவாரணம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணன், துணைத் தலைவர் சிற்றம்பலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story