கரூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ், ஆங்கில பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு
கரூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ், ஆங்கில பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
கரூர் அரசு கலைக்கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 30-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதனையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தங்களது அசல் மாற்று சான்றிதழ், அசல் சாதி சான்றிதழ், அசல் 10, 11, 12-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், அசல் ஆதார் அட்டை, 5 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் மற்றும் இணையவழியில் பதிவிட்ட விண்ணப்பத்தின் அச்சு நகல் ஆகியவற்றுடன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.
மேலும் அனைத்து சான்றிதழ்களின் 2 நகல்களையும் கொண்டு வர வேண்டும். கலந்தாய்வு சேர்க்கை பெற்ற மாணவ, மாணவிகள் கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும். கட்டணம் தொடர்பான விவரங்களை கல்லூரி இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கரூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.