துப்புரவு பணியாளர்களுக்கான கருத்துகேட்பு கூட்டம்
திண்டுக்கல்லில் துப்புரவு பணியாளர்களுக்கான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
திண்டுக்கல் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் தொழிற்சங்கம் (ஐ.என்.டி.யூ.சி) சார்பில், மாநகராட்சியில் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கான கருத்துகேட்பு கூட்டம் திண்டுக்கல்லில் தனியார் மகாலில் நடந்தது. கூட்டத்துக்கு துப்புரவு தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் காளிராஜ் தலைமை தாங்கினார். தலைவர் பக்ருதீன், செயலாளர் காளிமுத்து, பொருளாளர் விநாயகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் மணிகண்டன், கவுன்சிலர்கள் கார்த்திக், பாரதி ஆகியோர் பங்கேற்று துப்புரவு பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்தனர். கூட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சியில் 20 துப்புரவு பணியாளர்களை தொகுப்பூதிய பணியாளர்களாக பணியமர்த்தவும், தனியார் ஒப்பந்த முறையை ஒழிக்கவும், துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.