கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் அனைத்தும் கிடைக்க நடவடிக்கை கலெக்டர் ஸ்ரீதர், அதிகாரிகளுக்கு உத்தரவு


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் அனைத்தும் கிடைக்க நடவடிக்கை  கலெக்டர் ஸ்ரீதர், அதிகாரிகளுக்கு உத்தரவு
x

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் அனைத்தும் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கலெக்டர் ஸ்ரீதர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து துறைகளின் நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவது குறித்த அரசு அதிகாரிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசுகையில், அனைத்து துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கும் வகையில் வட்டார அளவில் முகாம்கள் நடத்த வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி அட்டை வழங்கி பணி வழங்க வேண்டும். வருவாய்த்துறை மூலமாக உதவித்தொகை வழங்குதல் மற்றும் இதர சான்றுகள் வழங்குதல், மாவட்ட தொழில் மையம், மாவட்ட முன்னோடி வங்கி, கூட்டுறவு வங்கிகள் மூலமாக தொழிற்கடனுதவிகள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க அனைத்து துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனா் தேவநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், நேர்முக உதவியாளர் (நிலம்) ஹஜிதா பேகம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story