வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்


வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 26 Nov 2022 12:30 AM IST (Updated: 26 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு மாநகர செயலாளரும், துணைமேயருமான ராஜப்பா தலைமை தாங்கினார். அவைத்தலைவர் காமாட்சி, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான இ.பெ.செந்தில்குமார் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது, நாளை (இன்று) நடைபெற உள்ள சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாமில், நமது வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்று கண்காணிக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் குறைவான வாக்காளர்களே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இதனால் மக்களிடம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்களை இணைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆதார் எண்ணை இணைப்பதால் இரட்டை பதிவு தவிர்க்க முடியும். புதிய வாக்காளர்கள் சேர்க்கை, திருத்தம் போன்ற பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். கூட்டத்தில் மாநகர துணைசெயலாளரும், மேயருமான இளமதி, மாவட்ட துணைச்செயலாளர்கள் நாகராஜன், பிலால் உசேன், பொருளாளர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்


Next Story