நாயன்மார்கள் சிலை அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம்
ஆற்காடு கங்காதர ஈஸ்வரர் கோவிலில் நாயன்மார்கள் சிலை அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்புக்கானா பகுதியில் உள்ள அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவிலில் 63 நாயன்மார்கள் சிலை அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
கோவில் திருப்பணி குழு தலைவர் பொன்.கு.சரவணன் தலைமை தாங்கினார்.
மகாத்மா காந்தி அறக்கட்டளை தலைவர் ஜெ.லட்சுமணன் சேக்கிழார் மன்ற தலைவர் ஆ.வி.தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் கோவிலுக்கு புதிதாக நாயன்மார்கள் மற்றும் சேக்கிழார் உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள் உபயதாரர்கள் மூலம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து உபயதாரர்கள் சிலைகள் அமைப்பதற்கு பாலமுருகனடிமை சுவாமிகளிடம் நிதி உதவி வழங்கினார்கள்.
கூட்டத்தில் காய்கனி வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.சி.ஜானகிராமன், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பூ.ச.அமிர்தலிங்கம் மற்றும் தன்னார்வலர்கள், சிவபக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஓய்வு பெற்ற நல்லாசிரியர் திருஞானம் நன்றி கூறினார்.