ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ஆலோசனை கூட்டம்
கடையநல்லூரில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தென்காசி
கடையநல்லூர்:
கடையநல்லூரில் அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ஆலோசனை கூட்டம் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி பாண்டியன் தலைமையில் நடந்தது. மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், 'வருகிற செப்டம்பர் 1-ந் தேதி வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவல் கிராமத்தில் நடைபெறும் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்த வருகை தரும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். அதில் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் உள்பட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்' என்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story