முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்


முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்
x

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நேற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊரகப்பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது கலெக்டர் தெரிவித்ததாவது:- தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் 1,545 பள்ளிகளில் செயல்படவுள்ளன. அதில் கரூர் மாவட்டம் ஒன்று. கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 21 ஊராட்சிகள், 2 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் 77 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் வழங்கப்படவுள்ளது.

திங்கட்கிழமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமை சேமியா காய்கறி கிச்சடி, புதன்கிழமை வெண்பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்கிழமை கோதுமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை சேமியா கேசரி அல்லது ரவா கேசரி சுழற்சி முறையில் ரவா காய்கறி கிச்சடி இதுபோன்ற வகையான காலை உணவு சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. பள்ளி தொடங்கும் முன் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட வேண்டும். காலை சிற்றுண்டி தயாரிக்கப்பட்டு பள்ளிகளில் தினசரி காலை 8.15 மணி முதல் 8.50 மணிக்குள் வழங்கப்பட வேண்டும்.

தொடர்ந்து இத்திட்டத்தினை செயல்படுத்துதல் ஊராட்சி அளவில் ஊராட்சி மன்ற தலைவர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள், ஒரு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பிரதிநிதிகள், கண்காணிப்புக்குழுக்கள் காலை உணவு வழங்கும் திட்டத்தினை திறம்பட செயல்படுத்துவதற்கு மேற்கண்ட துறை அலுவலர்களை கொண்ட மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை, ஊரக வளர்ச்சி, நகர்புற நிர்வாகம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக்கல்வி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் மற்றும் உணவு பாதுகாப்பு ஆகிய துறைகள் கண்காணிப்பு குழுக்களாக அமைக்கப்பட்டு செயல்படுத்த வேண்டும், என்றார்.


Next Story