விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்
விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வேலூர்
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி, சிலை ஊர்வலம் ஆகியவை அசம்பாவிதம் இன்றி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அரசின் நிபந்தனைகளுக்குட்பட்டு சிலைகள் வைக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் சிலை அமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்தும், சிலை வைக்க அனுமதி பெறுவது குறித்தும் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் அரசு அலுவலர்கள், காவல் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story