முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜிஎஸ்டி தொடர்பாக ஆலோசனை கூட்டம்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜிஎஸ்டி தொடர்பாக ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 22 July 2022 11:53 AM IST (Updated: 22 July 2022 2:39 PM IST)
t-max-icont-min-icon

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீப காலமாக பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், அரசு திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் வந்தார்.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்றபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் கடந்த 12-ந்தேதி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவலில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

பின்னர் 14-ந்தேதியன்று காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சில நாட்கள் ஓய்வெடுத்த அவர் 18-ந்தேதி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அன்று தலைமைச்செயலகத்துக்கு வந்து ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கை செலுத்தினார். சில நாட்களாக தலைமைச்செயலகத்திற்கு வராமல் முகாம் அலுவலகத்தில் இருந்தபடி அரசு பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்திற்கு வந்தார். இந்நிலையில் தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இக்கூட்டத்தில் அடுத்த மாதம் மதுரையில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதாகவும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கான தேதி, ஏற்பாடு குறித்தும் , செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெள்யாகி உள்ளது.


Next Story