வாக்காளர் விவரங்களுடன் ஆதார் எண் இணைப்பது குறித்து ஆலோசனை கூட்டம்


வாக்காளர் விவரங்களுடன் ஆதார் எண் இணைப்பது குறித்து ஆலோசனை கூட்டம்
x

திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் விவரங்களுடன் ஆதார் எண் இணைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர் அனைவரும் தங்களது வாக்காளர் விவரங்களுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த பணிகள் துரிதப்படுத்தும் வகையில் திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகத்தில் நகரமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு உதவி கலெக்டர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். தேர்தல் துணை தாசில்தார் பொன்விழி முன்னிலை வகித்தார். நகராட்சி தேர்தல் உதவியாளர் எம்.பாலசுப்பிரமணியம் வரவேற்றார்.

ஆலோசனை கூட்டத்தில் வருகிற 4-ந் தேதி திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி நிலையங்களிலும் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.

மேலும் வாக்காளர் விவரங்களுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கு நகரமன்ற உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென உதவி கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் திருவண்ணாமலை தாசில்தார் எஸ்.சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் சாப்ஜான், மண்டல துணை தாசில்தார் மணிகண்டன், தி.மு.க. நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், கிராம நிர்வாக அலுவலர் கோபால் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் எஸ்.முருகன் நன்றி கூறினார்.


Next Story