பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம்
விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம்
விக்கிரவாண்டி
விழுப்புரம் கோட்டத்துக்குட்பட்ட தாலுகா அலுவலர்களுக்கான வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். விக்கிரவாண்டி மண்டல துணை தாசில்தார் பாரதிதாசன், வரவேற்றார். கூட்டத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையின் போது ஏற்படும் இயற்கை பேரிடர் மற்றும் வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் தாசில்தார்கள் ஆனந்தகுமார், கணேஷ், பாஸ்கர், ஆதிசக்தி சிவகுமாரி மன்னன், கோவர்த்தனன் மற்றும் மண்டல துணை தாசில்தார்கள், பொதுப்பணி, தீயணைப்பு, மருத்துவ துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் சார்லின் நன்றி கூறினார்.